டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்றால், தங்கள் பிராந்தியத்தில் அச்சுறுத்தல் நீடிக்கும் என்பதால், ஆன்லைனை பயன்படுத்தி, தவறான தகவல்களை சீனா பரப்பி வருகிறது.
விரைவில் நடக்கப்போகும் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோற்க வேண்டும் என சீனாவும் , ஈரானும் விரும்புவதாகவும், அதற்காக இந்த நாடுகள் மறைமுக பணிகளில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க உளவுத்துறை ஏக்கரித்துள்ளது. அதேபோல் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கு எதிராகவும் ரஷ்யா செயல்பட்டு வருவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதாவது: அமெரிக்க தேர்தலில் தாங்கள் விரும்புபவர்கள் வெற்றி பெற வேண்டும் என, விரும்பும் நாடுகள், அது தொடர்பாக மறைமுக பணிகளில் ரகசிய அறிக்கையும் வெளியிட்டுள்ளன. மறைமுகமாகவும் தலையிடுகின்றன. தேர்தல் நடக்க இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில், மறைமுகமாக தலையீடுகின்றன.டிரம்ப் தோல்வியடையும் விரும்பும் நாடுகள் பட்டியலில் சீனா முதலிடத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். டிரம்ப்பை கணிக்க முடியாதவராக கருதும் அந்தநாடு, டிக்டாக், ஹாங்காங் மற்றும் கொரோனா விவகாரங்களில், அவரை கடுமையாக விமர்சனம் செய்துவருகிறது.
இதற்கடுத்து, டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்றால், தங்கள் பிராந்தியத்தில் அச்சுறுத்தல் நீடிக்கும் என்பதால், ஆன்லைனை பயன்படுத்தி, தவறான தகவல்களை பரப்பி வருகிறது.
சமூக வலைதளம் மற்றும் டிவி மூலம் தவறான செய்தியை வெளியிட்டு வருகின்றது எனவும் .உளவுத்துறையின் கணிப்புகள் உண்மை தன்மை வாய்ந்தவை, அரசியல் சாராதவை. இந்த தகவல்கள் குறித்து டிரம்ப் , ஜோபிடன் மற்றும் பார்லிமென்ட் உறுப்பினர்களிடமும் தெரிவித்துவிட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.