கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24முதல் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகின்றன இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஆகஸ்ட் 10 முதல் உடற்பயிற்சி கூடங்கள் திறப்பதாக அறிவிப்பு வெளியிடப் பட்டது இந்நிலையில் தமிழகத்தில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, தனியார் உடற்பயிற்சி கூடங்கள் உள்ளன. இவற்றில் ஏராளமான பயிற்சியாளர்கள் உள்ளனர். மேலும், இவர்களை சார்ந்து, நேரடியாகவும், மறைமுகமாகவும், 1.50 லட்சதிற்கும் அதிகமானோர் உள்ளனர். உடற்பயிற்சி செய்யாமல் பல்வேறு மக்கள் பெரும் சிரமம் பெற்று வந்தனர் இந்நிலையில் இன்று முதல் உடற்பயிற்சி கூடங்கள் இயங்க, அரசு அனுமதி அளித்துள்ளது.
அதற்கான பாதுகாப்பு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டு இருந்தது அதன் படி சாதாரண முக கவசம் அணிய வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒருவர் மட்டுமே, ஒரு கருவியில் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இரண்டு மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். பயிற்சி பெறுவோரின் உடல் வெப்பநிலை கட்டுக்குள் இருக்கிறதா என அடிக்கடி பரிசோதனை செய்து பார்த்துக்கொள்ளவேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.அதேபோல் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளும், இன்று முதல் செயல்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.