தமிழ் சினிமாவில் காஞ்சனா சீரியல் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தமிழில் ஒரு நிரந்தமான ஹீரோவாக தன்னை நிலைப்படுத்திக் கொண்டவர் ராகவா லாரன்ஸ். ரசிகர்கள் மத்தியில் அந்தப் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றதோடு வியாபார ரீதியாகவும் ஜெயித்துள்ளது.
இதையடுத்து திரையுலகில் தவிர்க்க முடியாத நபர்களில் ஒருவரானர் ராகவா…தற்போது கூட ஹிந்தியில் அக்ஷய் குமாரை வைத்து லட்சுமி பாம் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். விரைவில் இப்படம் OTT தளத்தில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் ஒரு முக்கியமான தெலுங்கு ரீ மேக் படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கில் முன்னணி நடிகர் ராம்சரண், சமந்தா மற்றும் பலர் நடித்து 2018ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியையும், வரவேற்பையும் ரசிகர்கள் மத்தியில் பெற்ற படம் ‘ரங்கஸ்தலம்’. இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ் மற்றும் கதாநாயகியாக நிக்கி கல்ரானி ஆகியோர் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கெனவே ராகவா லாரன்ஸ் நடித்த ரீமேக் படங்களான ‘மொட்ட சிவா கெட்ட சிவா, சிவலிங்கா’ இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெறவில்லை. இருந்த போதும் இந்த ரீ மேக் படத்தில் வாய்ப்பு ராகவா லாரன்ஸை தேடி வந்துள்ளது. ரங்கஸ்தலம் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ் வெற்றிப் பெறுவாரா என தற்போதே திரையுலகம் ஆவலோடு காத்திருக்கிறது…