மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..

இன்று வெள்ளி கிழமை தேதி 04.12.2020,நல்ல நேரம் : காலை 9.15 – 10.15,மாலை 4.45 – 5.45
ராகுகாலம் காலை 10.30-12.00,
எமகண்டம் மாலை 3.00-4.30, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.
மேஷம்:
முக்கிய பிரமுகர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது. தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு இருந்தால் இன்று விலகும். பழைய கடனைத் தீர்க்க அதிக வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் சூட்சுமங்களை அறிந்து செயல்பட்டு உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும்.
ரிஷபம்:
அதிக கலைப் பொருட்கள் வாங்குவதற்கான வாய்ப்புள்ளது.குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சொத்து பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். நீண்ட நாள் சொத்து பிரச்சனைகள் விலகி நிம்மதி கிடைக்கும்
மிதுனம்:
புதியவரின் நட்பால் சந்தோசம் பெருகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறந்தாலும் அதை திறம்பட கையாளுவீர்கள். வியாபாரத்தில் அதிக லாபம் பெற சிறப்பான நாள்.உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் அளிப்பார்கள்.
கடகம்:
கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.அதிக வேலைப்பளு காரணமாக உடல்சோர்வு ஏற்படும்.இன்றைய நாளில் பணவிஷயத்தில் சிக்கனத்தை மேற்கொள்வது நல்லது.உதவிகள் தானாக முன்வந்தாலும் அதை ஏற்க மறுப்பீர்கள்.
சிம்மம்:
சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டிய நிலைமை வரும். பிள்ளைகளிடம் பாசத்தை வெளிப்படுத்துவது நல்லது. பழைய கடன் பிரச்சனையில் தீர்வு கிடைக்கும். . உத்தியோகத்தில் உயரதிகாரிகள் மூலம் சங்கடங்கள் வரும்.
கன்னி:
பிள்ளைகளின் செயல்களால் உறவினர் மற்றும் நண்பர்கள் இடையே மதிப்பு உயரும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றும். உங்களுடைய எதிர்பார்ப்பு போல் சிறப்பான நாளாக அமையும். வியாபாரம் தழைத்து உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள்.
துலாம்:
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். நீங்கள் எதிர்பார்க்க கூடிய வேலை மாற்றத்தை கொடுக்கக்கூடிய நல்ல நாள் ஆகும். உத்தியோக உயர்வை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.
விருச்சிகம்:
வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை செய்ய தூண்டுவீர்கள்.வாகன யோகம் பெருகும்.உடன்பிறப்புகளின் உண்டான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமான சூழல் ஏற்படும்.
தனுசு:
உத்தியோக உயர்வை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.கோபத்தை கட்டுப்படுத்துவதற்கான வழியை மேற்கொள்வது நல்லது. சொந்த பந்தங்கள் தேடி வருகை அமையும் . வீடு வாகனத்தை வாங்க இன்று யோகம் உண்டு.
மகரம்:
எந்த ஒரு காரியத்திற்கு முன்பு ஒரு முறை குல தெய்வ வழிபாடு மேற்கொண்டால் எடுத்த காரியம் சிறப்பாய் இயங்கும்.பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் அதை திறம்பட செய்து முடிப்பீர்கள்.வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள்
கும்பம்:
சொந்த பந்தங்களின் வருகை சிறப்பானதாக அமையும்.குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். குழப்பங்கள் நீங்கி,தெளிவு பிறக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும்.உத்தியோகத்தில் மேலதிகாரிகள் முழு ஆதரவு கிடைக்கும்.
மீனம்:
மிகவும் சோர்வாக காணப்படுவீர்கள்.நண்பர்களால் உங்களுக்கான நேரம் குறைந்துவிடும்.வேலை பளு அதிகமாக காணப்படும்.உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார்கள்.




