மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..
இன்று புதன் கிழமை தேதி 06.01.2021, நல்ல நேரம் :காலை 6.00-7.00, நண்பகல் 9.00-10.00,
ராகுகாலம் மாலை 12.00-1.30,எமகண்டம் காலை 07.30-09.00, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.
மேஷம் :
முக்கியமான முடிவுகள் எடுக்கும் நாளாக அமையும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பொருளாதார தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உங்கள் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள்.
ரிஷபம்:
சுப நிகழ்ச்சிகள் மற்றும் தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. பணி நிமித்தமான பயணங்கள் காணப்படும். உங்கள் செயல்திறனுக்கு மேலதிகாரிகளின் அங்கீகாரம் கிடைக்கும். முன் கோபத்தை குறைத்துக்கொள்ள ஆன்மிகத்தில் ஈடுபடுவது நல்லது.
மிதுனம்:
குடும்பத்தில் உள்ளவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும் . பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உங்கள் பணிகளில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமுடன் செயல்படுவது நல்லது.
கடகம்:
எடுத்த காரியங்களை சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்களின் வழியே சுபசெய்திகள் வந்து சேரும். உங்கள் திறமையையும் புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்தி தொழிலில் வெற்றி பெறுவீர்கள். வெளியிடங்களுக்கு சென்று வருவதன் மூலம் கணவன் மனைவிடையே அன்பு அதிகரிக்கும்.
சிம்மம் :
குடும்ப பொறுப்புகளில் உடன்பிறப்புகள் உதவியாக இருப்பார்கள். வேலையில் சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். நிதிநிலைமை இன்று சாதகமான நிலையில் அமையாது. வரவு கணக்குகள் இன்று வந்து சேராது.
கன்னி:
எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியை அளிக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். உறவினர்களால் அனுகூலம் பெறுவீர்கள். வேலை பார்க்கும் நிறுவனத்தில் சக பணியாளர்களுடன் தவறான புரிந்துணர்வு ஏற்படும்.
துலாம்:
பணியில் திறம்பட செயல்பட்டு எடுத்த காரியத்தை சிறப்புடன் முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி குறையும். ஆடம்பர செலவுகளை குறைத்தால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். உங்கள் துணையிடம் அத்தகைய அணுகுமுறை மேற்கொள்வது பலன் அளிக்கும்.
விருச்சிகம்:
வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். வெளியூர் பயணங்களில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கடினமான பணிகளைக் கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையுடன் நல்லுறவை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்வீர்கள்.
தனுசு:
வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உங்களிடம் தன்னம்பிக்கை நிறைந்து காணப்படும். உங்களின் நம்பிக்கை நல்ல ஆரோக்கியத்தை தரும். உங்கள் செயல் திறன் காரணமாக மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.
Read more – வெள்ளை நிற ஜெர்சி அணிவது பெருமை மிகுந்த தருணம் : இந்திய வீரர் நடராஜன்
மகரம்:
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. விருப்பமானவற்றை அடைய நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். வேலையில் பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். சுப நிகழ்ச்சிகள் தானாக வந்து கைகூடும். செலவுகள் அதிகமாக காணப்படும்.
கும்பம்:
எந்த செயலிலும் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. பணிச்சுமை அதிகமாக காணப்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பண வரவு குறைந்து செலவுகள் அதிகமாக காணப்படும். உங்கள் துணையுடன் நகைச்சுவை உணர்வோடு பழகுவீர்கள்.
மீனம் :
புதிய தொடர்புகள் ஏற்படுத்திக்கொள்ளும் நாளாக அமையும். வேலை நிமித்தமாக வெளியூர் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு பாராட்டு கிடைக்கும். பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவது லாபகரமாக இருக்கும்.