மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..
இன்று செவ்வாய் கிழமை தேதி 21.04.2021, நல்ல நேரம் :காலை 9.30-10.30, மாலை 3.00- 4.00, ராகுகாலம் காலை 12.00-1.30 , எமகண்டம் மாலை 7.30- 9.00, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.
மேஷம் :
உறவினர்கள் மூலம் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் முன்னேற்றத்தை காண முடியும். தொழில் கணக்கு வழக்குகளில் கவனமுடன் இருப்பது நல்லது.
ரிஷபம் :
விடிந்தவுடன் சுப செய்திகள் காதுகளில் வந்து ஒலிக்கும். குடும்பத்தினர் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். கொடுக்கல் வாங்கலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
மிதுனம் :
குடும்பத்தில் தீடிரென அமைதியற்ற சூழ்நிலை நிலவ நீங்கள் காரணமாய் இருப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் சற்று கவனம் தேவை. பணிபுரியும் நேரத்தில் நண்பரின் உதவியால் பணிச்சுமை குறையும்.
கடகம் :
வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து நமக்கு சாதகமாய் அமையும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும். வியாபார ரீதியாக இருந்த பழைய பாக்கிகள் வசூலாகும்.
சிம்மம் :
தொழில் வியாபாரத்தில் கடுமையான உழைப்பு முன்னேற்றமாக உருவெடுக்கும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைத்து நன்மை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கும்.
கன்னி :
குடும்பத்தில் காணப்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையலாம். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளி பயணங்களில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.
துலாம் :
உறவினர்கள் வருகையால் வீட்டில் சந்தோஷம் நிலைக்கும். இன்றைய பொழுதில் உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். வியாபார ரீதியான பயணங்களால் அதிக லாபம் அடைவீர்கள்.
விருச்சிகம் :
பணவரவு சுமாராக இருந்தாலும் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். உத்தியோக ரீதியான பயணங்களில் அலைச்சலுக்கேற்ப நற்பலன்கள் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும்.
தனுசு :
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படலாம். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். சுபகாரிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. குடும்பத்தை நினைத்து தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும்.
மகரம் :
வேலையில் உங்கள் திறமைக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும்.
கும்பம் :
உறவினர்கள் மூலம் உள்ளம் மகிழும் செய்திகள் வந்து சேரும். உத்தியோக ரீதியான முன்னேற்றம் கிடைக்கும். பூர்வீக சொத்துகளால் நல்ல அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில் முன்னேற்றத்திற்கான உழைப்புகள் அனைத்திற்கும் நற்பலன் கிடைக்கும்.
மீனம் :
உறவினர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். நண்பர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிட்டும். கடன் பிரச்சினைகள் குறையும்.