மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..

இன்று புதன் கிழமை தேதி 23.12.2020,நல்ல நேரம் :காலை 9.15-10.15, மாலை 4.30-5.00,
ராகுகாலம் மாலை 12.00- 1.30, எமகண்டம் காலை 7.30-9.00, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.
மேஷம்:
நீங்கள் குழந்தைக்கு செய்யும் செலவுகள் வீண்செலவுகளா மாறும்.உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது.குடும்ப உறுப்பினர்களுடன் தேவை இல்லாத கருத்து வேறுபாடு ஏற்படும்.வேலை செய்யும் நிறுவனங்களில் சக ஊழியர்களின் ஆதரவால் அனுகூலம் கிடைக்கும்.
ரிஷபம்:
குடும்பத்தோடு வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வெளி ஆட்களின் நட்பால் வருமானம் இரு மடங்கு அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினைகளில் தீர்வு கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நன்மை அளிக்கும்.
மிதுனம்:
உறவினர்களின் வழியில் சுபமான செய்திகள் வந்தடையும். வியாபாரத்தின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் பலன் அளிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.கடன் சுமை குறையும்.
கடகம்:
நண்பர்களின் வழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க தாமதம் ஆகும். இஷ்ட தெய்வங்களை வேண்டிக்கொள்வதன் மூலம் எடுத்த காரியங்கள் வெற்றி அடையும். வாகன யோகங்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு கைகூடும். தேவை இல்லாத மனக்கஷ்டங்களை புறம் தள்ளுவது நல்லது.
சிம்மம்:
விடியலில் தொடங்கி உடலில் தொடர்ந்து அசதி ஏற்படும். பொது வெளிகளில் தேவை இல்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வாகனத்தில் வெளியில் செல்லும்போது மிகவும் கவனமாய் இருத்தல் அவசியம்.வீண் செலவுகள் வீண் செயல்களால் உண்டாகும்.
கன்னி:
வீட்டுக்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும். நண்பர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புக்கள் வந்தடையும்.
துலாம்:
புதிய தொழில் தொடங்குவதற்கான திட்டங்கள் கைகூடும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.குடும்பத்தினரின் வருகையால் சிறு செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் விலகும். வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
விருச்சிகம்:
உடன் பிறந்தவர்களினால் குடும்பத்தில் தேவை இல்லாத பிரச்சனைகள் உண்டாகும். பூர்வீக சொத்துகளை வழியில் எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். தொழில் விஷயமான வெளியூர் பயணங்களால் வருமானம் அதிகரிக்கும்.
தனுசு:
குலதெய்வ வழிபாடு மேற்கொண்டால் எடுத்த காரியம் கைகூடும். வரவு செலவு கணக்குகளில் சற்று கவனமுடன் இருந்தால் நல்லது. பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொருளாதார நிலை மந்தமாக இருந்தாலும் மனதளவில் நிம்மதியாக காணப்படுவீர்கள்.
மகரம்:
முன்கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. கணவன் மனைவியிடையே சிறு மனக்கசப்பு ஏற்படும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். குழந்தைகள் விஷயத்தில் கவனமாக இருத்தல் வேண்டும்.
கும்பம்:
உறவினர்கள் உறுதுணையாய் நீங்கள் நிகழ்த்தும் காரியங்களில் நிற்பார்கள். குழந்தைகளால் பெற்றோர்களுக்கு பெருமை வந்து சேரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் அடைந்து அதிக அளவு லாபம் கிட்டும். எந்த செயலையும் துணிவோடு செய்து முடிப்பீர்கள்.
மீனம்:
குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் ஒற்றுமை நிலவும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்தால் நல்ல லாபம் பெறலாம். பெண்கள் சற்று ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.




