மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..
இன்று வியாழன் கிழமை தேதி 24.12.2020,நல்ல நேரம் :காலை 10.45-11.45, மாலை 12.15-1.15,
ராகுகாலம் மாலை 1.30- 3.00, எமகண்டம் காலை 6.00-7.30, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.
மேஷம்:
இன்று நீங்கள் எடுக்கும் காரியங்களில் சிறு தடை ஏற்படும்.எதிர்பார்த்த மகிழ்ச்சிகரமான செய்திகள் வந்தடையும்.கணவன் மனவியிடையே நல்ல புரிதல் ஏற்பட சிறு சண்டைகள் ஏற்படும்.குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறும்.
ரிஷபம்:
வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். வியாபாரத்தில் வருமானம் பெருகும். நிலம் மனை வீடு சம்பந்தமான முயற்சிகளில் வெற்றியும் கிடைக்கும்.
மிதுனம்:
பொருளாதார நிலை மந்தமாக இருந்தாலும் மனதளவில் நிம்மதியாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் ஏற்படும் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. .குடும்ப பெரியவர்களின் உடல் நிலையில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. வயிற்று சம்பந்தமான கோளாறுகள் வந்து நீங்கும்.
கடகம்:
தீடிர் சுபமங்கள நிகழ்ச்சிகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. புதிய தொழில் மற்றும் புதிய முதலீடுகள் செய்ய ஆர்வமாய் இருப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்தால் நல்ல லாபம் பெறலாம்.எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள்.
சிம்மம்:
தொழில் போன்ற விஷயங்களில் பிறரை நம்பாமல் நீங்களே முழுமூச்சுடன் செயல்படுவது நல்லது. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி அடையும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது போன்ற விஷயங்களில் நன்மை உண்டாகும்.
கன்னி:
கணவன் மனைவி இடையே ஒற்றுமை ஏற்படும். குழந்தைகளினால் குடும்பத்தில் அமைதி நிலை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சற்று பணிச்சுமை கூடுதலாக இருந்தாலும் அதில் வெற்றி பெற்று அசத்துவீர்கள். புதிய நபர்களிடம் பழகும் போது எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது.
துலாம்:
உடல் ஆரோக்கியத்தில் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இட மாற்றத்தை எதிர்பார்க்கும் போது நல்ல செய்தி வந்தடையும். குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு சிறிது செலவு உண்டாகும்.
விருச்சிகம்:
பயணத்தின் போது சற்று கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. வெளிநாடுகளில் இருந்து பணம் வருவதற்கான வாய்ப்பு வந்து சேரும். எதிர்கால வளர்ச்சிக்காக முதலீடு செய்வதில் எண்ணமும் செயல்பாடுகளும் செல்லும். கடன் பிரச்சினைகள் குறையும்.
தனுசு:
வெளிநாடு செல்ல முயற்சி எடுப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்தடையும். குடும்பத்தில் சுப காரியங்களைப் பற்றிய பேச்சுவார்த்தைகள் தொடங்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பொது இடங்களில் அமைதியை கடைபிடிப்பது நல்லது.
மகரம்:
மனதில் இருந்த ஒரு நிகழ்வினை செயல் படுத்த கடுமையாக போராடுவீர்கள். உடன் பிறப்புகளிடம் சாதகமான நிலை தொடரும். காதல் தொடர்பான விஷயங்களில் மகிழ்ச்சிகரமான நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
கும்பம்:
பயணத்தின் போது சற்று கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. மகிழ்ச்சிகரமான நிகழ்வுகள் மிக நீண்ட நாட்களுக்கு பிறகு காதில் வந்தடையும்.நிலம் மனை வீடு சம்பந்தமான முயற்சிகளில் வெற்றியும் கிடைக்கும்.
மீனம்:
திருமணம் போன்ற சுபகாரிய விஷயங்களை சிறிது நாட்கள் தள்ளிப்போடுவது நல்லது. பெற்றோர்களின் ஆசீர்வாதத்தால் புதிய தொழில்களை துவங்குவீர்கள்.தொடர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பொருளாதாரத்தில் ஏற்றம் கண்டு குடும்பத்தில் மகிழ்ச்சி பரவும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.