இன்று ஞாயிற்றுக்கிழமை தேதி 18.10.2020, ராகுகாலம் காலை 4.30-6.00, எமகண்டம் மதியம் 12.00-1.30, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

மேஷம்
சந்திரன் இன்றைய தினம் உங்களின் ராசிக்கு இன்று ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். சந்திரன் பார்வை உங்க ராசிக்கு கிடைக்கிறது. வீட்டில் கணவன் மனைவி இடையே அன்னோன்யம் அதிகரிக்கும். உங்களின் நிதி நிலைமை அற்புதமாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் அதிகரிக்கும்.கொடுத்த கடன் திரும்ப கிடைக்கும் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்
ரிஷபம்
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்கள் இன்று உங்களுக்கு அறிமுகமாவார்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். நீண்ட நாட்களாக பார்க்க வேண்டும் என நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் வருமானம் உயரும். தொட்டது துலங்கும் நாள்.
மிதுனம்
மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பிரார்த்தனையை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். நீண்ட நாள் கனவு நனவாகும் நாள்.
கடகம்
நண்பர்களின் ஆதரவும் கிட்டும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் வராத பாக்கிகள் இன்று வசூலாகும். உத்தியோகத்தில் விமர்சனங்களை தாண்டி முன்னேறுவீர்கள். தடைகளை தாண்டி வெல்லும் நாள்.
சிம்மம்
குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் அடைவீர்கள். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். புது வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி பல முக்கிய பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைப்பார்.
கன்னி
இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். கடனாக கொடுத்த பணம் இன்று வீடு தேடி வரும்.ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். மிகவும் மகிழ்ச்சியான நாள்.
துலாம்
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து சேமிக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். முன்கோபத்தால் பகை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயரதிகாரிகளை நம்பி பெரிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம்.
விருச்சிகம்
எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து செல்லும். உறவினர்கள் நண்பர்கள் சிலர் பணம் கேட்டு உங்களிடம் தொந்தரவு செய்வார்கள். திடீர் பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள்.
தனுசு
சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் விருப்பங்களை இன்று நிறைவேற்றுவீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி பொங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். மிகவும் சிறப்பான நாள்.
மகரம்
புதிய பாதையில் பயணிக்க தொடங்குவீர்கள். பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். நம்பிக்கைக்குரியவர்களுடன் ஆலோசித்து பல முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கி இருக்கும். உங்கள் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும் நாள்.
கும்பம்
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும்.
மீனம்
சந்திராஷ்டமம் இருப்பதால் ஒருவித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தில் பல விஷயங்களை நீங்களே பார்க்க வேண்டி வரும். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். எதிர்பார்த்த சலுகைகள் உங்களுக்கு தாமதமாக கிடைக்கும். பொறுமை தேவைப்படும் நாள்.




