இன்று வெள்ளிக்கிழமை தேதி 13.11.2020, ராகுகாலம் காலை 10.30-12.00, எமகண்டம் மாலை 3.00-4.30, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.
மேஷம்
உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும் நாள். கல்யாணப் பேச்சு கைகூடும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் பல சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். புதிய தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
ரிஷபம்
உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டு அறிவு பூர்வமாக இன்று நீங்கள் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை சீக்கிரம் முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.
மிதுனம்
புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.
கடகம்
எதிர்பார்த்த காரியங்கள் சில தள்ளிப் போகும் ஆனால் எதிர்பார்த்த வேலை நடக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும் நாள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்த்த நன்மை கிட்டும் நாள்.
சிம்மம்
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும் நாள். பயணங்களால் புது அனுபவம் கிடைக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களைத் தேடுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கி இருக்கும்.
கன்னி
கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் வந்து போகும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்கள் உங்களைப் புரிந்து கொண்டு நடப்பார்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். புது அத்தியாயம் பிறக்கும் நாள்.
துலாம்
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து போகும். நெருங்கியவர்களிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லிஆதங்கப்படுவீர்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து போகும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.
விருச்சிகம்
பழைய கசப்பான சம்பவங்களை நினைத்து கொண்டிருக்க வேண்டாம். அண்டை அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம் எரிச்சல் அடைய நேரிடலாம். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள்.
தனுசு
உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும் நாள். சுபப்பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் முக்கிய பொறுப்புகளை ஏற்பீர்கள். எண்ணங்கள் புதிய நிறைவேறும் நாள்.
மகரம்
உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றி கொள்ளுங்கள். பிள்ளைகளின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்று நடப்பீர்கள். விஐபிகளால் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் உங்களை தேடிவரும். அலுவலகத்தில் மரியாதை கூடும் நாள்.
கும்பம்
கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும் நாள். எதிர் பார்த்த வேலைகள் தடையின்றி முடியும் நாள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து அதிக லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.
மீனம்
சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் ஏற்படும் நாள். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியலாம். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டவே வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும் நாள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள்.