இன்று ஞாயிற்றுக்கிழமை தேதி 06.09.2020, ராகுகாலம் மாலை 4.30-6.00, எமகண்டம் பிற்பகல் 12.00-1.30, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.
மேஷம்
சுயமுயற்சியை சார்ந்திருங்கள். அதனால் தன்னம்பிக்கை அதிகரித்து பல ஆச்சரியங்களை ஏற்படுத்த கூடிய நாள். உங்கள் செயல்களை சாமார்த்தியமாக கையாளுங்கள்.
ரிஷபம்
உங்கள் அணுகுமுறையில் நல்ல திட்டமிடல் வேண்டும். நிதிக்கான அதிர்ஷ்டம் குறைந்து காணப்படுகின்றது. எனவே நிதி விஷயங்களை கவனமாக கையாள்வது அவசியம்.
மிதுனம்
இன்று ஆதாயம் கிடைக்கும் நாள். இன்று உங்கள் மனம்அமைதியாக இருக்கும் நாள், நீங்கள் சில முக்கியமான முடிவுகளை இன்று எடுக்கலாம்.
கடகம்
உங்கள் காரியங்களை எளிதாக செய்வீர்கள். அதிக நண்பர்கள் மற்றும் தொடர்புகளைப் பெறுவீர்கள்.பொருளாதார வளர்ச்சி சிறப்பாக அமையும். நிதி சம்பந்தமான சில முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம்.
சிம்மம்
உங்கள் வளர்ச்சிக்கும் அதை அடைவதற்கும் இடையே உள்ள இடைவெளிகளை நீக்கி வளர்ச்சி பெறுவீர்கள். உங்கள் அணுகுமுறையில் யதார்த்தத்தை கடைபிடிக்க முயலுங்கள்
கன்னி
இன்று மொத்தத்தில் நல்ல நாள். ஆனால் சில தடைகளை நீங்கள் சந்திக்க நேரலாம். உங்கள் நேரமும் கவனமும் தேவைப்படும் விஷயங்களுக்கு நேரத்தை ஒதுக்கி கவனம் செலுத்துங்கள்.
துலாம்
இன்று பலவிதமான செயல்களில் ஈடுபட்டிருப்பீர்கள். நிதிநிலையைப் பொறுத்தவரை இன்று சோதனையான நாள். பணத்தை கவனமாக செலவு செய்ய வேண்டும்.
விருச்சிகம்
முயற்சிகளில் பல வெற்றி கிடைக்கும். முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு இன்று உகந்த நாள்.கடன் வகையில் இன்று உங்களுக்கு பணம் கிடைப்பதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது. இன்று உங்களுக்கு அனுகூலமான நாள்.
தனுசு
முன்னேற்றத்தை அடைவதற்காக நீங்கள் பல யோசனைகளைக் கொண்டு பரிசோதிப்பீர்கள்.இன்று வரவும் செலவும் ஒரு சேர காணப்படும். பணம் வீணாகாதவாறு சீராகப் பயன்படுத்தங்கள்.
மகரம்
இன்று பலன்கள் கலந்தே காணப்படும். நேர்மறையான அணுகுமுறையை கொண்டிருங்கள்.தலைவலி மற்றும் பல்வலி போன்ற பிரச்சினைகளுக்கு வாய்ப்பு இருப்பதால் ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.தியானம் மேற்கொள்வது நல்லது.
கும்பம்
இன்று பலன்கள் கலந்தே காணப்படும். குடும்பம் மற்றும் அதன் வளர்ச்சி சம்பந்தமான பொறுப்புக்கள் அதிகம் காணப்படும்.
மீனம்
மாறும் சூழ்நிலைக்கேற்ப உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.சில அசௌகரியங்கள் காணப்படலாம்.இன்று நிதிநிலைமை சாதகமாக இல்லை. திட்டமிட்டு பணத்தை முறையாக பயன்படுத்தங்கள்.