இன்று ஞாயிற்றுக்கிழமை தேதி 13.09.2020, ராகுகாலம் மாலை 4.30-6.00, எமகண்டம் பிற்பகல் 12.00-1.30, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

மேஷம்
இன்று உங்களுக்கு ஆக்கப் பூர்வமான நாள், இன்று ஆற்றலும் உறுதியும் அதிகமாக காணப்படும். இன்று எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றியை அளிக்கும்.
ரிஷபம்
இன்று உங்கள் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து சில நல்ல திட்டங்களை உருவாக்குவீர்கள். உங்கள் தொழில் வட்டாரத்தில் சிறந்த தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். உணர்ச்சிவசப்படுதலைத் தவிர்க்க வேண்டும்..
மிதுனம்
உங்கள் செயல்களை ஊக்கத்துடன் குறித்த நேரத்தில் செய்வதால் நல்ல பலன்கள் கிடைக்கும். சின்னச் சின்ன விஷயங்களுக்காக மன அமைதியை கெடுத்துக் கொள்ளாமல் விஷயங்களை சகஜமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
கடகம்
உங்கள் அனைத்து செயல்களையும் கவனமுடன் செய்வதற்கு உரிய நேரத்தையும் ஆர்வத்தையும் மேற்கொள்ளுங்கள். இதனால் வெற்றி கிடைக்கும். முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்
சிம்மம்
கோவில் திருவிழாக்கள் அல்லது ஆன்மிகக் காரியங்கள் இன்று உங்களுக்கு மன நிம்மதியை தரலாம். முக்கிய முடிவுகள் இன்று எடுக்கலாம்.
கன்னி
இன்றைய நாள் சிறப்பாக அமையும். உங்களுக்கு சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். இது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். இன்று சரியான முடிவுகளை எடுப்பீர்கள்.
துலாம்
என்ன வேலை செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு பணியாற்றுங்கள். முக்கியமான வேளைகளில் கவனம் செலுத்தி அதனை விரைவாக செய்ய முயற்சி செய்யுங்கள்.
விருச்சிகம்
இன்று உற்சாகமாக இருப்பீர்கள். உங்கள் வளர்ச்சியை பாதிக்கும் தேவையற்ற உணர்வுகளுக்கு இடம் அளிக்கவேண்டாம் அமைதியாக இருந்து எதையும் லேசாக எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளின் வளர்ச்சி குறித்த கவலை காணப்படும்.
தனுசு
இன்று உங்களுக்கு சிறந்த நாளாகும் முக்கியமான முடிவுகளை இன்று எடுக்கலாம். இன்று மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் காணப்படுவீர்கள்.
மகரம்
இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள், புதிய தொடர்புகள் மற்றும் புதிய நண்பர்கள் அமைத்துக் கொள்ள இன்று உகந்த நாளாகும்.
கும்பம்
இன்று அதிக பொறுப்புகள் காணப்படும். பதட்டப்பட வேண்டாம். முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டாம்.
மீனம்
இன்று முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கலாம் முக்கியமான செயல்களை வேறு ஒரு நாளைக்கு தள்ளிப்போடவும். எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கை இழக்கவேண்டாம்.




