இன்று புதன் கிழமை தேதி 23.09.2020, ராகுகாலம் பிற்பகல் 12.00-1.30, எமகண்டம் காலை 7.30-9.00, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.
மேஷம்
இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும் . அதன் காரணமாக நீங்கள் சில பலன்களை பெறலாம்.
ரிஷபம்
இன்று உங்கள் செயல்களில் சிறிது கவனமாக இருக்க வேண்டும். உற்சாகமாக இருப்பீர்கள் என்றாலும் தகுந்த திட்டமிடல் அவசியமாகும்.
மிதுனம்
சிறந்த திட்டமிடல் காரணமாக புதிய நம்பிக்கை உணர்வு பிறக்கும் . இதனால் உங்கள் தன்னம்பிக்கை அதிகமாக வாய்ப்புள்ளது. பிரார்த்தனை மேற்கொள்வதன் மூலம் ஆறுதல் பெறலாம்.
கடகம்
இன்று முற்போக்கான வளர்ச்சிகள் ஏற்படும் நாள். முக்கிய முடிவுகளை நீங்கள் எடுக்க நேரிடலாம். அது உங்களுக்கு தக்க பலன்களைத் தரும்.
சிம்மம்
கோவில் திருவிழாக்கள் அல்லது ஆன்மிகக் காரியங்கள் இன்று உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் .
கன்னி
வாழ்க்கையின் சாரம் பற்றி இன்று நீங்கள் கற்பீர்கள். இஷ்ட தெய்வங்களை வணங்குதல் மற்றும் ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவதன்மூலம் உங்கள் கவலைகளை நீங்கள் மறக்கலாம்
துலாம்
இன்று உற்சாகமாக பணியாற்றுவீர்கள் பணியின் பொழுது சுறுசுறுப்பாகக் காணப்படுவீர்கள். அதனால் உங்களுக்கு அதிக வெற்றிகள் கிடைக்கும்.
விருச்சிகம்
உங்களது சிறந்த அணுகுமுறைமூலம் உங்கள் திறமைகளை நிரூபிப்பீர்கள். இன்று வெளிப்படையாகப் பேசுவதன் மூலம் பலரின் வெறுப்புக்கு ஆளாகுவீர்கள்.
தனுசு
இன்று இறை வழிபாட்டில் ஈடுபடுவதன் மூலம் வெற்றிகரமான பல பலன்களைக் பெறுவீர்கள். அதன் மூலம் இன்றைய நாளை சிறப்பானதாக ஆக்குவீர்கள். உங்கள் வாழ்க்கை தரத்ததை உயர்த்துவீர்கள்
மகரம்
வெளியிடங்களுக்குச் செல்வது சிறப்பான உணர்வைத் தரும். உங்கள் செயல்களில் உணர்ச்சிப்பூர்வமாக இருப்பதைவிட யதார்த்தமாக இருப்பது அவசியம். இன்று நீங்கள் அமைதியாக இருப்பது நன்மை பயக்கும்.
கும்பம்
இன்று நீங்கள் எதிர்பார்த்த பலன்களைப் பெறுவீர்கள். உள்ளதைக் கொண்டு வளமோடு இருப்பீர்கள். உங்களின் இனிமையான பேச்சால் பிறரை திருப்தியடையச் செய்வீர்கள்.
மீனம்
இன்று உங்கள் திறமைகள் நன்கு புரிந்து கொள்ளப்படும் உங்கள் விருப்பத்திற்கேற்றவாறு உங்கள் லட்சியங்களை அமைத்துக் கொள்வதில் நீங்கள் சாமர்த்திய சாளியாக இருப்பீர்கள்.