இன்று வியாழக்கிழமை தேதி 08.10.2020, ராகுகாலம் மதியம் 1.30-3.00, எமகண்டம் காலை 6.00-7.30, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

மேஷம்
மற்றவர்களுடன் பழகும்பொழுது எப்படி பழகுகிறீர்கள் என்று கவனத்தில் கொண்டு பழகுங்கள். பொறுமையுடன் இருந்தால் இலக்குகளை அடைவதில் வெற்றி பெறலாம்.
ரிஷபம்
இன்று சில பயணங்கள் ஏற்படலாம்.இன்று பிறருடன் தொடர்பு கொள்வதில் குறைபாடு காணப்படும்.இன்று நீங்கள் உணர்ச்சி வசப்படக்கூடிய வாய்ப்பு உள்ளது.
மிதுனம்
இன்று பொறுப்புகள் அதிகமாகக் காணப்படும்.சௌகரியங்கள் குறைந்து காணப்படும். எதையும் பொறுமையுடன் கையாளவேண்டும்.
கடகம்
இன்று உங்கள்செயல்களை நன்கு ஆற்றுவீர்கள்.நல்ல வளர்ச்சி காணப்படும்.உங்கள்விருப்பங்கள் நிறைவேறுவதற்கு உகந்த நாள்.
சிம்மம்
நீங்கள்இன்று பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். எந்தச் செயலையும் ஒரு முறைக்கு இருமுறை ஆராய்ந்து செய்ய வேண்டும்.
கன்னி
இன்று வெற்றி பெறுவதற்கு அதிக முயற்சிகள்செய்ய வேண்டியிருக்கும்.இன்று அதிக சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
துலாம்
இன்று சற்று மந்தமான நாளாக இருக்கும்.உங்களது சூழ்நிலையைக் கண்டு உணரச்சிவசப்படாதீர்கள்.இன்று முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள் அல்ல.
விருச்சிகம்
இன்று நீங்கள் மேற்கொள்ளும்செயல்கள் அனைத்து செயல்களிலும் வெற்றி கிடைக்கும்.புதிய நபர்கள் மற்றும் நண்பர்களின் தொடர்பு கிடைக்கும்.இன்று முழுவதும் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.
தனுசு
இன்று முழுவதும் வேலையில் மும்மரமாக இருப்பீர்கள்.நல்ல முடிவுகளை எடுக்க இந்த நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.இன்று நீங்கள் விரைந்து செயலாற்றுவீர்கள்.
மகரம்
இன்று முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு உகந்த நாள் அல்ல.புத்திசாலித்தனமாக செயலாற்றுவதன் மூலம் இன்றைய நாளை நீங்கள் உங்களுக்கு சாதகமாக்கிக் கொள்வது நல்லது.
கும்பம்
இன்று மந்தமான நாள். உங்கள் செயல்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.உங்கள் கவலைகள் அதிகரிக்காமல் இருக்க தேவையற்ற எண்ணங்களை கைவிடுங்கள்.
மீனம்
இன்று பலன் தரும் முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள்.இன்று உறுதியும் தைரியமும் உங்களிடம் அதிகமாக காணப்படும்.




