இன்று ஞாயிற்றுக்கிழமை தேதி 25.10.2020, ராகுகாலம் காலை 4.30-6.00, எமகண்டம் மதியம் 12.00-1.30, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.
மேஷம்
இன்று மிதமான பலன்களே கிடைக்கும். இருப்பினும் மேற்கொண்டு செல்வதற்கு சில உந்துதல்கள் தேவைப்படுகிறது.
ரிஷபம்
இன்று நிலுவையில் உள்ள பணிகளை செய்வதற்கு உந்துதல் கிடைக்கும் நாள். உங்கள் முயற்சி மூலம் இன்றைய நாளை வளமாக்கலாம்.
மிதுனம்
இன்றைய நாள் மிதமான பலன்களைத் தரும். யதார்த்தமான அணுகுமுறை மூலம் நீங்கள் நல்ல பலன்களைக் காணலாம். எதிர்மறை எண்ணங்களை நீங்கள் கைவிடுங்கள்
கடகம்
ஆன்மீக செயல்களுக்கு நேரம் ஒதுக்குங்கள். இதனால் நற்பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். எளிதில் உணர்சிவசப்படுவீர்கள். இதனை தவிர்த்துவிடுங்கள். இன்று நீங்கள் முக்கியமான முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம்.
சிம்மம்
இன்று வெற்றி பெறுவதற்கு யதார்த்தமான அணுகுமுறை வேண்டும். முக்கியமான முடிவுகள் எடுப்பதை இன்று தவிர்க்கலாம்.
கன்னி
இன்று உற்சாகமான நாள். இன்றைய நாளை திருப்தியுடன் கொண்டாடி மகிழ்வீர்கள்.இன்று நல்ல மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.
துலாம்
இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். புதிய நண்பர்கள் மற்றும் புதிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும் நாள்.
விருச்சிகம்
உங்கள் செயல்களை ஆற்றும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் நீங்கள் நம்பிக்கை இழக்கக் கூடாது.
தனுசு
இன்று சுமாரான நாள். இன்று தைரியம் சிறிது குறைந்து காணப்படும். உறுதியுடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.
மகரம்
உங்கள் முயற்சியில் வெற்றி பெற உகந்த நாள். உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். இன்று அதிக நற்பலன்கள் கிடைக்கும் நாள்.
கும்பம்
இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாள். இன்று கூடுதல் பலன்கள் கிடைக்கும். முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு திட்டமிடலாம்.
மீனம்
இன்றைய நாள் சுமாராக இருக்கும். கவனக் குறைவாக இருந்தால் சில சிறந்த வாய்ப்புகளை இழக்க நேரிடும். எனவே நகைச்சுவையுடன் கூடிய அணுகுமுறை உங்களுக்கு திருப்தியை அளிக்கும்.