
இன்று வியாழக்கிழமை தேதி 01.10.2020, ராகுகாலம் மதியம் 1.30-3.00, எமகண்டம் காலை 6.00-7.30, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.
மேஷம்
இன்று முக்கிய முடிவுகளை சற்று யோசித்து எடுங்கள் பொறுப்புகள் அதிகமாகும். இது உங்களுக்கு சுமையாக இருக்கலாம்.
ரிஷபம்
இன்று நீங்கள் நல்ல மனநிலையில் இருப்பீர்கள். நீங்கள் எந்த முடிவெடுத்தாலும் அது உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு சிறப்பான நாள். இன்று நீங்கள் உறுதியான மனநிலையில் இருப்பீர்கள். நீங்களாக சில முடிவெடுப்பீர்கள்.
கடகம்
இன்று உங்களுக்கு சாதகமான நாள் அல்ல. எனவே மகிழ்ச்சியுடன் இருக்க முயலுங்கள். எதிலும் பதட்டம் அடையாதீர்கள்.
சிம்மம்
உங்கள் குடும்ப நண்பர்களின் ஆரோக்கியத்திற்காக மருத்துவ செலவுகள் ஏற்படலாம். இது உங்களுக்கு சிறிது கவலையை ஏற்படுத்தும்.
கன்னி
இன்று புதிய நண்பர்களை பெறுவீர்கள். இதனால் உங்கள் நட்பு வட்டாரம் விரிவடையும். நீங்கள் புகழடைவீர்கள்.நல்ல நிலைமை அடைவீர்கள்.
துலாம்
அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் காணப்படும். நீங்கள் பயனுள்ள முடிவுகளை எடுக்க இயலும். குறுகிய காலத்திற்குள் நீங்கள் உங்கள் பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள்.
விருச்சிகம்
இன்று நன்மையையும் தீமையும் கலந்து காணப்படும். நீங்கள் பொறுமை காக்க வேண்டும். இன்று சமயோசித புத்தியுடன் செயல்பட வேண்டும்.
தனுசு
உங்கள் திறமைகளை சோதிக்கும் சூழ்நிலை உருவாகும் என்பதால் பொறுமையாக இருப்பது அவசியம். உங்கள் முன்னேற்றத்தில் மந்த நிலை காணப்படலாம். அதிகமாக சிந்திக்காமல் தெளிவான மன நிலையுடன் இருங்கள்.
மகரம்
தினசரி செயல்களை மேற்கொள்ளும்போது யதார்த்தமான அணுகுமுறை தேவை. பெரிய அளவில் செயல்கள் நடக்கும் என்று நீங்கள் எதிர்பார்த்தால் சிறிது ஏமாற்றம் தான் கிடைக்கும்.
கும்பம்
இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாள். உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியே பெற்றுத் தரும். இன்று நீங்கள் நல்ல பலன்களை காண்பீர்கள்.
மீனம்
உங்கள் வழக்கமான பணிகளை கவனமாக முறையாக கையாள வேண்டும். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். ஆன்மீக நிகழ்ச்சிகளில் ஈடுபதுவது நல்ல பலன் அளிக்கும்.




