இன்று சனிக்கிழமை தேதி 05.09.2020, ராகுகாலம் காலை 9.00-10.30, எமகண்டம் காலை 1.30-3.00, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.
மேஷம்
உங்கள் மனதிலுள்ள எதிர்மறை எண்ணங்களை மறந்து விடுங்கள். நீங்கள் உற்சாகமாகவும் நம்பிக்கையுடனும் இருந்தால் உங்களுக்கு சாதகமான விளைவுகளைக் காணலாம்.
ரிஷபம்
இன்று உங்கள் விருப்பங்கள் நிறை வேறும் நாள் . அதனால் மனதில் மகிழ்ச்சி நிலவும். தொலை தூரத்திலிருந்து நல்ல செய்தி தேடி வரும்.இன்று நீங்கள் தியானம் அல்லது யோகா மேற்கொள்வது சிறந்தது.
மிதுனம்
இன்று நற்பயன்கள் கிடைக்கும். நீங்கள் அமைதியாகவும் சௌகரியமாகவும் உணரலாம். இன்று பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். உங்களின் சேமிப்பு ஆற்றல் உயரும்.
கடகம்
இன்று உங்களிடம் கவனம் அதிகமாக காணப்படும்.அதனை நீங்கள் நன்கு பயன்படுத்திக் கொள்வது உங்களுக்கு நன்மை பயக்கும். ஒரு கொள்கையோடு செயல்படுவது உதவிகரமாக இருக்கும்.
சிம்மம்
இன்று முக்கிய முடிவுகள் எடுக்க சிறந்த நாள் அல்ல. அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்காது. இன்று உங்களுக்கு பொறுப்புகள் அதிகமாக காணப்படும்
கன்னி
நீங்கள் நம்பிக்கையுடன் செயல்பட்டால் இன்று உங்கள் செயல்களில் வெற்றி வாய்ப்பு கிடைக்கும். திட்டமிட்டு செயலாற்ற வேண்டியது அவசியமாகும்.
துலாம்
உங்களின் அனுசரணையான அணுகுமுறையால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உங்கள் உறவினர்கள் மற்றும் கூட்டாளிகளுடன் நல்லுறவு காணப்படும்.
விருச்சிகம்
குடும்பத்தின் வளர்ச்சிக்கான செயல்களை தொடங்க உகந்த நாள். இன்று நீங்கள் நன்மையான பலன்கள் காண புத்திசாலித்தனத்துடன் செயல்பட வேண்டியது அவசியமாகும்.
தனுசு
இன்று உங்களிடம் திடமான நம்பிக்கையும் உறுதியும் இருக்கும். சில கடினமான சூழ்நிலைகளை கையாளும் தைரியம் அதிக அளவு காணப்படலாம். நம்பிக்கை உணர்வோடு இருந்தால் உங்களுக்கு சாதகமான நாளாக அமையும்.
மகரம்
சொல்புத்தியை விட செயல் புத்தியை.நன்கு பயன்படுத்தினால் நீங்கள் அதிகம் சாதிக்கலாம். சுய முன்னேற்றத்திற்கான முயற்சி மேற்கொள்ளுங்கள்.
கும்பம்
குடும்பத்தினரின் உடல் நலன் குறித்து எண்ணங்கள் உங்கள் மனதில் ஓடும். இதற்காக உங்கள் நேரத்தின் ஒரு பகுதியை இதற்கு ஒதுக்குவீர்கள்.
மீனம்
அதிக சிந்தித்தல் உங்களுக்கு குழப்பத்தையே ஏற்படுத்தும். இந்தப் போக்கை தவிர்த்து அமைதியாக இருக்க முயலுங்கள்.
இன்று அதிக செலவுகள் காணப்படும்.