மழை, மின்னல், மழலை-அனந்த் ரவி
செய்தி அலை சிறுகதைப் போட்டி– 122 மழை, மின்னல், மழலை-அனந்த் ரவி எங்கிருந்தோ பெரிய பெரிய மேகங்கள் மெல்ல நகர்ந்து வந்து சூழத் தொடங்கியிருந்தன ஒரு பேரரசனின் யானைப் படையை போல. அது வரை வீசிக் கொண்டிருந்த குளிர்ந்த காற்று நின்று போய் சட்டென்று ஒரு புழுக்கம் பரவத் தொடங்கியது. காது மடல்களின் பின்னால், பின் கழுத்தில் வியர்வைத் துளிகள் அரும்பத் தொடங்கின இது மழை வருவதற்கான அறிகுறிதான், எந்த வினாடியும் வந்து விடும் என்றுதான் தோன்றியது நாதனுக்கு. படுத்துக் கொண்டிருந்தவர் மெல்ல எழுந்து படுக்கையில் உட்கார்ந்து கொண்டார். கட்டிலுக்கு அருகில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தார். மணி பனிரெண்டரையை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்படியே பின்பக்கமாக மெல்லத் திரும்பி சுதாவைப் பார்த்தார். இன்னும் குறையாத கோபத்தோடு அவள் தூங்கிக் கொண்டிருப்பதாகத் தான் அவருக்குத் தோன்றியது. “வயசாச்சே தவிர குழந்தை மாதிரிதான்” என்று ...













