புதிய கார் வாங்க திட்டமிடும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில், சிறப்பு சேமிப்புச் சலுகைகளை டட்சன் கார் நிறுவனம் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக ரூ.47,500 வரை தள்ளுபடி சலுகைகளை பெறும் வாய்ப்பு இருக்கிறது.
இந்தியாவின் பட்ஜெட் கார் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களுக்கான சிறந்த மாற்றுத் தேர்வாக டட்சன் கார்கள் உள்ளன. பட்ஜெட் விலையில் போதிய இடவசதி கொண்ட டட்சன் ரெடிகோ, கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களுக்கு தனி வாடிக்கையாளர் வட்டம் உள்ளது.
டட்சன் கோ ப்ளஸ் மினி எம்பிவி காருக்கு ரூ.42,500 வரை சேமிப்பை பெறும் வாய்ப்பு உள்ளது. வரும் 15ந் தேதிக்கு பின்னர் இந்த சேமிப்புச் சலுகைகளில் மாற்றம் வர வாய்ப்பு இருக்கிறது. இதில், ரூ.15,000 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.20,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையாகவும் பெற முடியும். வரும் 15ந் தேதி வரை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.7,500 சிறப்புத் தள்ளுபடியும் வழங்கப்படும்.
டட்சன் கோ காருக்கு ரூ.47,500 வரை தள்ளுபடி பெறும் வாய்ப்பு இருக்கிறது. ரூ.20,000 வரையில் தள்ளுபடியாகவும், ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும் பெறலாம். அடுத்து வரும் 15ந் தேதி வரை முன்பதிவு செய்வோருக்கு ரூ.7,500 சிறப்புத் தள்ளுபடியாக வழங்கப்படும்.
டட்சன் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் டட்சன் ரெடிகோ காருக்கு ரூ.34,500 வரையிலான சேமிப்புச் சலுகைகளை பெற முடியும். இதில், ரூ.7,000 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.15,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும் பெறலாம். வரும் 15ந் தேதி வரை முன்பதிவு செய்வோருக்கு ரூ.7,500 சிறப்புத் தள்ளுபடியாகவும் பெரும் வாய்ப்புள்ளது.
கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்களுக்கு கார்ப்பரேட் போனஸாக ரூ.7,000 சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.