டுகாட்டி நிறுவனம் தனது 2021 மான்ஸ்டர் மோட்டார்சைக்கிள் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
டுகாட்டி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள 2021 மான்ஸ்டர் மோட்டார்சைக்கிளில், முந்தைய மாடல்களை காட்டிலும் அதிகப்படியான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில், பல்வேறு புதிய புது அம்சங்கள் மற்றும் வசதிகளும் வழங்கப்பட்டு உள்ளன.
இதுவரை வெளியிடப்பட்ட மான்ஸ்டர் பைக் மாடல்களிலேயே 2021 டுகாட்டி மான்ஸ்டர், மிகவும் எடை குறைந்த ஒன்றாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த பைக் ஷார்ப், ஸ்போர்ட் மற்றும் மஸ்குலர் டிசைன்களை கொண்ட்டுள்ளது. இதில் புதிய எல்இடி முகப்பு விளக்கு, வட்ட வடிவ எல்இடி டிஆர்எல்கள் மற்றும் எல்இடி பின்புற விளக்குகள் போன்றவையும் வழங்கப்பட்டு உள்ளன.
2021 மான்ஸ்டர் பைக்கில் வழங்கப்பட்டுள்ள 937 சிசி எல்-ட்வின் டெஸ்டாஸ்டிரெட்டா என்ஜின், 111 பிஹெச்பி பவர், 93 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் டு-வே குவிக்ஷிப்டரும் வழங்கப்பட்டு உள்ளது.
மேலும், 4.3 இன்ச் புல் கலர் டிஎப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டிராக்ஷன் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், மூன்றுவித ரைடிங் மோட்கள், கார்னெரிங் ஏபிஎஸ் மற்றும் லான்ச் கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் போன்றவையும் வழங்கப்பட்டுள்ளன.