ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது இருசக்கர வாகனங்களுக்கு, கனெக்டெட் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது மூன்று விதமான வாகனங்களில், ஹீரோ கனெக்ட் எனப்படும் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி வசதியை அறிமுகம் செய்துள்ளது.
ஆரம்பகட்டமாக இந்த தொழில்நுட்பம் டெஸ்டினி 125, பிளஷர் பிளஸ் மற்றும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 போன்ற மாடல்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த தொழில்நுட்பம் பிரத்யேக செயலியுடன் வாகன உரிமையாளரின் ஸ்மார்ட்போன் உடன் இணைக்கப்பட்டு செயல்படும். மேலும், ட்ராக்கிங், நேவிகேஷன் மற்றும் நொடிபிகேஷன் போன்ற பல்வேறு கூடுதல் வசதிகளையும் வழங்கும் திறன் கொண்டது.
இந்தியாவில் இதன் விலை ரூ. 6499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், அறிமுக சலுகையாக இந்த தொழில்நுட்பத்திற்கான விலை ரூ. 4999 என விற்பனை செய்யப்படுகிறது.