ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது கிளாமர் ஸ்பெஷல் எடிஷன் பைக்கை, இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இந்திய மோட்டார் சந்தையில் 125சிசி பிரிவில் பஜாஜ் பல்சர் 125, ஹீரோ கிளாமர் மாடல் ஹோண்டா ஷைன் மற்றும் ஹோண்டா எஸ்பி 125
போன்ற மாடல்கள் முன்னணியில் உள்ளன.
இந்நிலையில், மேற்குறிப்பிட்ட மாடல்களுக்கு போட்டியாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், தனது கிளாமர் மோட்டார்சைக்கிளின் ஸ்பெஷல் எடிஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
ஹீரோ கிளாமர் மாடலில் 124.7சிசி ஏர் கூல்ட் மற்றும் பியூயல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இது 10.72 பிஹெச்பி பவர், 10.6 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. மேலும், இதில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த மாடலில், என்ட்ரி லெவல் டிரம் பிரேக் மற்றும் டாப் எண்ட்
முன்புற டிஸ்க் மாடல்களின் இடையில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது. கிளாமர் பிளேஸ் எடிஷன் மேட் வெர்னியர் கிரே நிறத்தில் எல்லோ கிராபிக்ஸ் கொண்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது. பிரத்யேக நிறம் தவிர, ஹேண்டில் பாரில் யுஎஸ்பி சார்ஜர் வசதி இடம்பெற்றுள்ளது.
இந்த கிளாமர் மாடலில் புதிய பிளேஸ் நிறம் மட்டுமின்றி, டொர்னாடோ கிரே, டெக்னோ புளூ, ஸ்போர்ட்ஸ் ரெட் மற்றும் ரேடியண்ட் ரெட் ஆகிய நிறங்களிலும் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 72 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.




