ஹூண்டாய் நிறுவனத்தின் கிரேட்டா மாடல் கார் முன்பதிவில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

2015 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட கிரேட்டா மாடல் இதுவரை 5.2 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதில், கடந்த மார்ச் மாத வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய கிரேட்டா மாடல் கார், மே முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் நாட்டில் அதிகம் விற்பனையான எஸ்யுவி மாடலாக உள்ளதாக ஹூண்டாய் நிறுவனம் அறிவித்து உள்ளது.

அதன்படி, ஹூண்டாய் கிரேட்டா எஸ்யுவி மாடல் இந்திய சந்தை முன்பதிவில் 1.15 லட்சம் யூனிட்களை கடந்து இருக்கிறது.
கிரேட்டா மாடலை வாங்கியவர்களில் 60 சதவீதம் பேர் டீசல் வேரியண்ட்டை தேர்வு செய்துள்ளதாக ஹூண்டாய் தெரிவித்து இருக்கிறது. மேலும் க்ளிக் டு பை தளத்தில் சுமார் 1100 முன்பதிவுகளை கிரேட்டா பெற்று இருக்கிறது.




