இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2021 கேடிஎம் 125 டியூக் பைக் மாடலின் விவரங்கள் வெளியாகியுள்ளன.
கேடிஎம் நிறுவனம் தனது 2021 டியூக் 125 பைக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. 200 டியூக் போன்றே காட்சியளிக்கும் இந்த மாடலில் கூர்மையான முகப்பு விளக்கு, எரிபொருள் டேன்க் மற்றும் பின்புற பகுதி வழங்கப்பட்டு உள்ளது. இதன், எரிபொருள் கொள்ளளவு 10.5 லிட்டர்களில் இருந்து 13.5 லிட்டர்களாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
2021 டியூக் மாடலில் புதியதாக ஸ்ப்லிட் ரக டிரெலிஸ் பிரேம் அமைக்கப்பட்டு, இருக்கை முன்பை விட சவுகரியமாக மாற்றப்பட்டு உள்ளது. இதில் இடம்பெற்றுள்ள 125 சிசி லிக்விட் கூல்டு, 14.3 பிஹெச்பி பவர், 12 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. மேலும், டபிள்யூபி யுஎஸ்டி போர்க்குகள், மோனோஷாக், இருசக்கரங்களில் ஒற்றை டிஸ்க், சிங்கில் சேனல் ஏபிஎஸ் செட்டப் வழங்கப்பட்டு உள்ளது.
புதிய டியூக் 125 மாடல் விலை ரூ. 1.50 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய மாடலை விட ரூ. 8 ஆயிரம் விலை அதிகம் ஆகும். யமஹா எம்டி 15 மாடலுக்கு போட்டியாக அமையும் என கூறப்படும் நிலையில், அதை விட புதிய டியூக் மாடலின் விலை ரூ. 10 ஆயிரம் அதிகம் ஆகும்.