மஹிந்திரா நிறுவனத்தின் இகேயுவி100 மாடல் காரின், இந்திய வெளியீட்டு விவரங்கள் வெளியாகியுள்ளது.
நடப்பாண்டில் மஹிந்திரா நிறுவனத்திடம் இருந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, தார் மாடல் காரின் முன்பதிவு புதிக சாதனையையே படைத்துள்ளது.
இந்த சூழலில், 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டு கொரோனாவால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ள, மஹிந்திரா நிறுவனத்தின் இகேயுவி100 மாடல் இந்திய சந்தையில் 2021 ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதனை மஹிந்திரா அண்ட் மஹிந்திரா லிமிட்டெட் நிர்வாக இயக்குனர் பவன் கோயன்கா உறுதிபடுத்தியுள்ளார்.
ஆரம்ப விலை ரூ.8.25 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்த எலெக்ட்ரிக் கார், 55 நொடிகளில் 80% வரையில் சார்ஜ் ஆகக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரிமோட் முறையில் கதவை லாக்/அன்லாக் செய்யலாம், லொகேஷன் ட்ராக்கிங், டிரைவிங் பேட்டர்ன் மானிட்டர், 7இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், டூயல் ஏர்பேக்ஸ் போன்ற பல்வேறு அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
மஹிந்திரா இகேயுவி100 மாடலில் 40 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 15.9 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் பவர்டிரெயின் 53 பிஹெச்பி பவர், 120 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது
அடுத்த சில மாதங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்களை இந்திய சந்தையில் மஹிந்திரா அறிமுகம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.