மாருதி சுசுகி நிறுவனம் தனது எர்டிகா எம்பிவி மாடல் விற்பனையில், இந்திய சந்தையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து அதிகரித்து வரும் பயனாளர்களின் எண்ணிக்கை காரணமாக,
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மாருதி சுசுகி எர்டிகா மாடல் அதிகம் விற்பனையாகும் எம்பிவியாக உருவெடுத்துள்ளது. இதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிக விற்பனையில் மாருதி சுசுகி எர்டிகா மாடல் தொடர்ந்து
முன்னணியில் உள்ளது.
மாருதி சுசுகியின் எர்டிகா மாடல் கார் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது, மாருதி எர்டிகா எம்பிவி மாடல் இரண்டாம் தலைமுறை வெர்ஷன் விற்பனையாகி வருகிறது. இந்தியாவில் நவம்பர் 2018 ஆண்டு இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் வெளிப்புறம் மற்றும் உற்புறங்களில் முற்றிலும் புதிய வடிவமைப்பு செய்யப்பட்டு உள்ளது.
பின் 2019 ஆம் ஆண்டு மாருதி சுசுகி நிறுவனம் எர்டிகா மாடலின் 6 பேர் பயணிக்கக்கூடிய வெர்ஷனை எக்ஸ்எல்6 பெயரில் அறிமுகம் செய்தது. இந்த மாடலும் நெக்சா விற்பனையகங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாருதி சுசுகி நிறுவனத்தின் எர்டிகா எம்பிவி மாடல் கார் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் எட்டியுள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளில் மட்டும் மாருதி சுசுகி எர்டிகா எம்பிவி மாடல் 5.5 லட்சம் யூனிட்களுக்கும் அதிகமாக விற்பனையாகி இருக்கிறது.