மாருதி சுஸுகி நிறுவனம் 2022 எர்டிகா எம்.பி.வி ரக கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய மாடலுடன் ஒப்பிடுகையில் பல்வேறு புதிய கட்டமைப்புகள் இந்த காரில் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்த காரில் 1.5 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேடட் இன்லைன் 4 பெட்ரோல் எஞ்சின் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் 103 பிஎச்பி பவர் மற்றும் 136.8 என்.எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வழங்கும். இதே எஞ்சின் சி.என்.ஜி தேர்விலும் கிடைக்கிறது.
அதன்மூலம் 87.8 பிஎச்பி பவர் மற்றும் 121.5 என்.எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக இந்த கார் வழங்கும். பெட்ரோல் மாடல் கார் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கின்றன. ஆனால் புதிய மாருதி சுஸுகி எர்டிகா சி.என்.ஜி மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் தேர்வில் மட்டுமே கிடைக்கும்.
புதிய மாடலில் தானாக ஒளிரும் முகப்பு விளக்குகள், சுஸுகி கனெக்டட் தொழில்நுட்பம், க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட கட்டமைப்புகள் உள்ளன. இதனுடைய சி.என்.ஜி தேர்வில் பிரத்யேகமான ஸ்பீடோமீட்டர் உள்ளன. மாருதி சுஸுகி எர்டிகா மாடலில் டாப் வேரியண்டில் 4 ஏர்பேகுகள் உள்ளன.
ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வந்த பியர்ல் ஆர்டிக்ட் ஒயிட், மேக்மா க்ரே, ஆபர்ன் ரெட், ப்ரைம் ஆக்ஸ்ஃபோர்டு ப்ளூ ஆகிய வண்ணங்களுடன், புதியதாக ஸ்பெலின்டிட் சில்வர் மற்றும் டிக்னிட்டி ப்ரவுன் என கூடுதலாக 2 தேர்வுகளில் 2022 மாருதி சுஸுகி எர்டிகா கார் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த காரின் ஆர்ம்ப விலை ரூ. 8.35 லட்சம் (எக்ஸ்ஷோரூம், இந்தியா) மதிப்பில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் டாப் வேரியண்ட் பெட்ரோல் மாடலின் விலை ரூ. 12.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், இந்தியா) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த எம்பிவியின் எஸ்-சிஎன்ஜி வேரியண்ட்களின் ஆரம்ப விலை ரூ. 10.44 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.