பேட்டரி வெடிப்பு சர்ச்சைகளுக்கு மத்தியில் ஓலா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓலா நிறுவனம் தயாரித்த மின் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகமான போது வாடிக்கையாளர்கள் போட்டிபோட்டுக் கொண்டு வாங்கினர். ஆனால் வெளியான ஒரு சில மாதங்களில் அந்நிறுவனத்தின் மின் ஸ்கூட்டர்கள் தொடர்ச்சியாக பல்வேறு விபத்துகளில் நிகழ்ந்தது.
இதையடுத்து நடப்பாண்டி தன்னுடைய எஸ் 1ப்ரோ மின் ஸ்கூட்டரின் 1441 யூனிட்டுகளை திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்தது. எனினும் இந்த ஸ்கூட்டரின் மின் ஸ்கூட்டர் விற்பனை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்தது.
இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் 12 ஆயிரம் யூனிட்டுகளுக்கு மேல் மின்சார ஸ்கூட்டரை அந்நிறுவனம் விற்றுள்ளதாக அறிவித்தது. இதன்மூலம் மின்சார ஸ்கூட்டருக்கான தேவை வாடிக்கையாளர்களிடம் அதிகரித்துள்ளது தெரியவந்தது.
இந்நிலையில் ஓலா நிறுவனம் ஓலா எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலையை ரூ. 10 ஆயிரம் அதிகரித்துள்ளது. இதன்மூலம் தற்போது இந்த ஸ்கூட்டரின் விலை ரூ. 1.20 வரை விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த விலை மத்திய அரசின் FAME II (ஹைப்ரிட் மற்றும் மின்சார வாகனங்களின் வேகமான உற்பத்தி மற்றும் பயன்பாடு) திட்டத்தின் கீழ் மானியத்தை உள்ளடக்கியது என ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.