கேடிஎம் நிறுவனத்தின் 250 அட்வென்ச்சர் மாடல் பைக்கின் முன்பதிவு இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது.

கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக் என்ட்ரி லெவல் மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையிக், தோற்றத்தில் கேடிஎம் 390 அட்வென்ச்சரின் சாயல்களை கொண்டுள்ளது.
இந்த புதிய மாடலில் 248.8சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 30 பிஹெச்பி பவர், 24 என்எம் டார்க் செயல்திறன் கொண்டுள்ளது.

கேடிஎம் நிறுவனம் விரைவில் 250 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் வெளியிட உள்ளது. என்ட்ரி லெவல் கேடிஎம் 250 அட்வென்ச்சர் மாடல் முந்தைய 390 அட்வென்ச்சர் மாடலை விட 50 ஆயிரம் ரூபாய் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இந்த மாடலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டு உள்ளது.
எனினும், கேடிஎம் விற்பனையாளர்கள் மட்டும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் முன்பதிவுகளை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. புதிய மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 1000 என நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.




