ஜாகுவார் நிறுவனத்தின் புதிய ஐ பேஸ் எலெக்ட்ரிக் கார் மாடலுக்கான் முன்பதிவு இந்தியாவில் தொடங்கி உள்ளது.

ஜாகுவார் லேண்ட் ரோவரின் இந்திய நிறுவனம், விரைவில் அறிமுகம் செய்ய உள்ள தனது ஆல்-எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடாலன ஜாகுவார் ஐ பேஸ் மாடல் காருக்கான முன்பதிவை தொடங்கி உள்ளது. காரின் விலை ஒரு கோடி ரூபாய் வரையில் இருக்கலாம் எனவும், முன்பதிவு கட்டணம் 5 லட்ச ரூபாய் எனவும் கூறப்படுகிறது.
இதில் உள்ள 90 கிலோவாட் பேட்டரி எட்டு வருடங்கள் அல்லது 1,60,000 கிலோமீட்டர் வாரண்டியுடன் வழங்கப்படுகிறது. மூன்று வேரியண்டுகளுடன் அறிமுகம் செய்யப்படும் இந்த மாடல், மணிக்கு 0-100 கிமீ வேகத்தை வெறும் 4.8 வினாடிகளில் எட்டும் எனக் கூறப்படுகிறது.

ஜாகுவார் ஐ பேஸ் ஆல் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் எஸ், எஸ்இ மற்றும் ஹெச்எஸ்இ என மூன்று வேரியண்ட்களில் கிடைப்பதோடு, புஜி வைட், கலெட்ரா ரெட், சன்டோரினி பிளாக், யுலொங் வைட், இன்டஸ் சில்வர், பிரென்ஸ் ரெட், கைசியெம் புளூ, பொராஸ்கோ கிரே, இகெய்ர் கிரே, போர்டோபினோ புளூ, பரலூன் பியல் பிளாக் மற்றும் அருபா ஆகிய நிறங்களிலும் கிடைக்கிறது.

புதிய ஜாகுவார் ஐ பேஸ் மாடலில் 90 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் 389 பிஹெச்பி பவர் வழங்குகிறது. ஐ பேஸ் கார் மாடலுக்கு ஐந்து வருடங்களுக்கு சர்வீஸ் பேக்கேஜ், ஐந்து ஆண்டுகளுக்கு ஜாகுவார் ரோட்-சைடு அசிஸ்டண்ஸ், 7.4 கிலோவாட் ஏசி வால் மவுண்ட் செய்யப்பட்ட சார்ஜர் வழங்கப்படுகிறது.




