பண்டிகை காலத்தை முன்னிட்டு ரெனால்ட் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு ரூ. 1 லட்சம் வரையிலான சலுகைகளை அறிவித்து உள்ளது.

பண்டிகை காலத்தில் வாகன விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், பல நிறுவனங்களும் விலை தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் ரெனால்ட் நிறுவனமும் ஏற்கனவே குறிப்பிட்ட கார் மாடல்களுக்கு சலுகைகள் அறிவித்து இருந்த நிலையில், தற்போது அந்த சலுகை மேலும் அதிகரித்து வழங்கப்பட்டு உள்ளது.
அந்த வகையில் பிஎஸ்6 க்விட், டஸ்டர் மற்றும் டிரைவர் போன் மாடல்களுக்கு அதிகபட்சமாக 1 லட்சம் ரூபாய் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த சிறப்பு சலுகையில் கார்ப்பரேட் தள்ளுபடி, லாயல்டி போனஸ் போன்றவை வழங்கப்படுகிறது.

அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது, ரெனால்ட் டஸ்டர் மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 1 லட்சம் ரூபாய் வரையிலான பலன்களும், டிரைவர் மாடலுக்கு ரூ. 39 ஆயிரம் மதிப்புள்ள பலன்களும், க்விட் மாடலுக்கு 49 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பலன்களும் வழங்கப்படுகின்றன. மேலும், ஊரக பகுதியில் வசிப்போருக்கும் சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது.




