ராயல் என்பீல்டு நிறுவனம் தனது புதிய மாடலான, Meteor 350 பைக்கின் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஊரடங்கிற்குப் பிறகு ஆட்டோமொபைல் துறை இயல்புநிலைக்கு திரும்பினாலும், விற்பனையை அதிகரிக்க பண்டிகை காலம் பெரிதாக உதவும் என பல நிறுவனங்கள் நம்பிக்கையுடன் உள்ளன. அந்த வகையில் பல நிறுவனங்கள் தங்களது புதிய வாகனங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்றன.
அந்த வகையில் ராயல் என்பீல்டு நிறுவனம் தனது Meteor 350 மாடல் பைக்கை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டுள்ள இந்த பைக், ஜெ1டி எனும் குறியீட்டு பெயரில் அழைக்கப்படும் புதிய பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு உள்ளது. டபுள் கிரேடில் சேசிஸ் மற்றும் புதிய 350 சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
பிஎஸ்6 ரக UCE 346சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 19.1 பிஹெச்பி பவர், 28 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்சும் இடம்பெற்றுள்ளது.
இத்தகைய பல்வேறு கூடுதல் அம்சங்களுடன் வரும் 6ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ள, Meteor 350 மாடல் பைக்கின் விலை ரூ.1.60 லட்சம் முதல் ரூ.1.90 லட்சம் வரை இருக்கும் என கூறபடுகிறது. இந்த புதிய பைக் ஜாவா, பெனலி இம்பீரியல் 400 மற்றும் ஹோண்டா ஹைனெஸ் சிபி 350 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ராயல் என்ஃபீல்டு Meteor 350 பயர்பால், ஸ்டெல்லார் மற்றும் சூப்பர்நோவா என மூன்று வேரியண்ட்கள் மற்றும் ஏழு வித நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.