டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ மாடல் காரில் புதிய மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டாடா நிறுவனத்தின் டியாகோ மாடல் கார் தற்போது எக்ஸ்இ, எக்ஸ்டி, எக்ஸ்இசட், எக்ஸ்இசட் பிளஸ், எக்ஸ்இசட்ஏ மற்றும் எக்ஸ்இசட்ஏ பிளஸ் என ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் எக்ஸ்டி வேரியண்ட் என்ட்ரி லெவல் மாடலுக்கு அடுத்த இடத்தில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், டியாகோ ஹேட்ச்பேக் மாடலை விரைவில் அப்கிரேடு செய்ய டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அந்த வகையில், டியாகோ எக்ஸ்டி வேரியண்ட்டில் ஸ்டீரிங் மவுன்ட் செய்யப்பட்ட ஆடியோ மற்றும் போன் கண்ட்ரோல்கள் வழங்கப்பட உள்ளன.
புது அப்டேட் கொண்ட மாடலின் பிரவுச்சரை டாடா மோட்டார்ஸ் வெளியிட்டு உள்ள நிலையில், மேம்பட்ட ஹேட்ச்பேக் வேரியண்ட் விரைவில் விற்பனை மையங்களை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா டியாகோ மாடலில் 1.2 லிட்டர், 3 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 85 பிஹெச்பி பவர், 113 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்படுகிறது.