டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நவம்பர் மாத பயணிகள் வாகன விற்பனையில், அதிரடி வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக நடப்பு நிதியாண்டின் முதல் காலண்டிலேயே, ஆட்டோமொபைல் துறை பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. ஆனாலும், மெல்ல மெல்ல எழுச்சி பெற்று, நவம்பர் மாத பண்டிகை காலத்த்தில் பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் விற்பனையில் நல்ல வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. அந்த வகையில் நவம்பர் மாதத்தில் டாடா நிறுவனம் 49,650 யூனிட்களை விற்பனை செய்து உள்ளது.
நவம்பர் மாத விற்பனை தொடர்பாக டாடா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டாடா நிறுவனத்தின் பயணிகள் வாகன விற்பனை முந்தைய பண்டிகை கால மாதத்துடன் ஒப்பிடும் போது 108 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. முந்தைய ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு டாடா மோட்டார்ஸ் எட்டு சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், 2019 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது டாடா நிறுவனம் 20.7 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. டாடா நிறுவனத்தின் மொத்த விற்பனை வணிக வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்கள் என பிரிக்கப்பட்டு இருக்கிறது. இதில் வணிக வாகனங்கள் 9 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.