TVS மோட்டார் கம்பெனி நிறுவனம் விரைவில் என்டார்க் 125 ஸ்கூட்டரை மஞ்சள் மற்றும் கருப்பு நிறங்களில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போதைய தகவல்களின் படி டிவிஎஸ் மோட்டார்ஸ் இரண்டு விதமான மாறுபட்டில் விற்பனையாளர்களுக்கு அனுப்ப துவங்கி விட்டதாக கூறப்படுகிறது. அந்த வகையில் புதிய நிறம் கொண்ட என்டார்க் ஸ்கூட்டர் விரைவில் விற்பனை மையங்களை வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் என்டார்க் மாடலுக்கு வடிக்கையாளர்களிடையே அமோக வரேவேற்பு கிடைத்து வருகிறது. புதிய மஞ்சள் மற்றும் கருப்பு நிற வேரியண்ட்கள் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என தெரிகிறது.

டிவிஎஸ் என்டார்க் புதிய 125 பிஎஸ்6 மாடலில் 124.8சிசி ஏர் குளிரூட்டும் , மூன்று வால்வுகளை கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 9.1 பிஹெச்பி பவர், 10.5 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த ஸ்கூட்டர் 12 இன்ச் அலாய் வீல்கள், முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய சந்தையில் TVS என்டார்க் 125 பிஎஸ்6 ஸ்கூட்டர் HONDA கிரேசியா, யமஹா ரே இசட்ஆர் 125, SUZUKI பர்க்மேன் ஸ்டிரீட் 125 மற்றும் HERO மேஸ்ட்ரோ எட்ஜ் 125 மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என கணிக்க படுகிறது.




