சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்பது நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர் உட்பட, அனைவருக்கும் முக்கிய ஆசையாக உள்ளது. அப்படிப்பட்ட, காரை வாங்குவதற்கு முன்பு கவனிக்க வேண்டிய முக்கிய விவரம் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.
வாடிக்கையாளர் கார் வாங்குவதற்கு முன்பாக விலை, டிரைவிங் ஸ்டைல், பராமரிப்பு போன்ற பலவற்றை கருத்தில் கொண்டு அவரவர் வசதிகளுக்கு ஏற்றவாறு காரை தேர்வு செய்வர். இன்றைய சூழலில் இதற்கு இணைய சேவை பெரும் உதவிகரமாக உள்ளது.
அந்த வகையில் கார் வாங்கும்போது முக்கியமாக கவனிக்க வேண்டியது, நீண்ட நாட்கள் பயன்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் அதன் உதிரிப் பாகங்கள் விஷயத்தில் அதிக கவனத்தில் செலுத்த வேண்டும்.
ஊரிலேயே வேறு யாரும் பயன்படுத்தாத காரை விலைக்கு வாங்கி பந்தவாக பயன்படுத்தும்போது, பழுது அல்லது உதிரிபாகங்கள் தேய்மானம் அடைந்தால், அவை சந்தையில் கிடைப்பதும், மாற்றுவது என்பதும் கடினமான செயலாக இருக்கும். பராமரிப்பு செலவும் எதிர்பார்த்ததைவிட அதிகமாகும்.
சந்தையில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் கார்கள் மற்றும் ஏராளமான வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் கார்களுக்கு உதிரி பாகங்கள் எளிதில் கிடைக்கும். அதிகமாக விற்பனையாகும் கார்களை கணக்கில் கொண்டுதான் உதிரி பாகங்கள் தயாரிக்கப்படுகின்றன. எனவே, சொந்தமாக கார் வாங்கும்போது பொதுமக்கள் இதனை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.