
இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும் வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையிலும் சமையல் காஸ் சிலிண்டர்களை விநியோகம் மற்றும் விற்பனை செய்கின்றன.
இந்த நிலையில் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் மாதம் தோறும் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்கின்றன. இதன்படி தமிழகத்தில் செப்டம்பரில் வீட்டு சிலிண்டர் 610 ரூபாய்க்கும்; வணிக சிலிண்டர் 1,250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன.
இம்மாதம் வீட்டு சிலிண்டர் விலையில் எந்த வித மாற்றம் இல்லாமல் 610 ரூபாயாகவே உள்ளது. ஆனால் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 26 ரூபாய் உயர்ந்து 1,276 ரூபாயாக அதிகரித்துள்ளது.




