ஈரான் இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. தங்கத்தின் விலையில் அடிக்கடி ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் சமீப காலமாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறிக் கொண்டே வருகிறது.
உலகளவில் நடைபெற்று வரும் போர்ச்சூழல் மட்டுமின்றி பெரும்பாலான நாடுகள் தங்கள் சேமிப்பு இருப்பாக தங்கத்தை வாங்கிக் குவிக்கிறது. இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
இன்று (13.06.25) ஒரு கிராம் ஆபரணத் ரூ. 9,295க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.74 ஆயிரத்து 360 க்கு விற்பனையாகி வருகிறது. நேற்றைய விலையை விட ரூ. ஆயிரத்து 560 உயர்ந்து விற்பனையாகி வருகிறது. விரைவில் தங்கம் சவரனுக்கு 75 ஆயிரம் ரூபாயைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளியின் விலையும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. வெள்ளி ஒரு வெள்ளி ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.





