சந்தையில் இன்று தங்கத்தின் விலை சற்றே உயர்ந்துள்ளது!

இந்த வருடம் ஆரம்பித்ததில் இருந்தே தங்கத்தின் விலை உயர்ந்தே காணப்படுகிறது. அந்த வகையில் இன்று அதிரடியாக ரூ. 352 உயர்ந்துள்ளது.
கொரோனாவால் மக்களின் நிதி நிலைமை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தங்கம் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 4,792 ஆக உள்ளது.
நேற்றைய விலையோடு ஒப்பிடும் போது இன்று 44 ரூபாய் அதிகரித்துள்ளது. அதேபோல, 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை இன்று ரூ. 352 உயர்ந்து ரூ. 38,336 ஆக உள்ளது. அதேபோல, வெள்ளியின் விலையும் உயர்ந்து ரூ. 73.70-வாக விற்பனையாகிறது. இதன் நேற்றைய விலை ரூ. 72 என்பது குறிப்பிடத்தக்கது.




