இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரங்களை பார்க்கலாம்.

தங்கம்- இன்றைய விலை!
கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த தங்கம் விலை இரண்டாவது நாளாக இன்று குறைந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 4,655 ஆக உள்ளது. நேற்றைய விலையை விட இது 5 ரூபாய் குறைவு ஆகும். அதேபோல, 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 37,240 ஆகும். இதன் நேற்றைய விலை ரூ. 37,280 ஆகும். 40 ரூபாய் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி- இன்றைய விலை!
வெள்ளி விலை இன்று எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி நேற்று ரூ. 71.40க்கு விற்பனை ஆனது. இன்றும் விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனை ஆகிறது. அதேபோல, ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 71,400 ஆகும்.




