இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரங்களை பார்க்கலாம்.
தங்கம் இன்றைய விலை!
இரண்டாவது நாளாக இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 13 ரூபாய் உயர்ந்து ரூ. 4,631 ஆக உள்ளது. இதன் நேற்றைய விலை ரூ. 4,618 ஆகும். அதேபோல, 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 37,048 ஆக உள்ளது. இது நேற்றைய விலையை விட ரூ. 104 அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளியின் விலை!
தங்கம் விலையை போலவே, வெள்ளியின் விலையும் இன்று அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 71க்கு நேற்று விற்பனையானது. இன்று அதன் விலை ரூ. 73.40 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 73,400 ஆகும்.