வாட்ஸ் அப் நிறுவனம் ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
வாட்ஸ் அப்பில் ஒரு நபரிடம் இருந்தோ அல்லது ஒரு குழுவில் இருந்தோ வரும் மெசேஜை பார்க்க நாம் முக்கியத்துவம் தருவதுண்டு. அந்த வகையில் இனி அவ்வாறு வரும் மெசேஜிகளை பின் டு டாப் செய்து வைத்துக் கொள்ளலாம். அவ்வாறு பின்செய்து வைத்துக்கொள்ளும் போது அந்த குறிப்பிட்ட நபர் அல்லது குழுவில் இருந்து வரும் மேசேஜை தவற விடாமல் பார்க்கலாம்.
இந்த வசதியை பயன்படுத்த வாட்ஸ் அப்பில் நீங்கள் பின் செய்ய நினைக்கும் நபர் அல்லது குழுவின் கணக்கை அழுத்திப் பிடிக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது, வாட்ஸ் அப்பில் மேலே தோன்றும் பின் சிம்பிளை கிளிக் செய்து வைத்துக் கொண்டால் போதும்.இந்த புதிய வசதி மூலம் 3 கன்வேர்சேஷன்களை பின் செய்து கொள்ள முடியும்.
-பா.ஈ.பரசுராமன்.