வால்மார்ட் நிறுவனத்தின் சொத்து மதிப்பு ஒரே நாளில் 90,000 கோடி (1,140 கோடி டாலர்) குறைந்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த முன்னணி சில்லறை விற்பனை நிறுவனமான வால்மார்ட் நிறுவனத்தின் தலைவர் சாம் வால்டன். இவரின் குடும்பம் உலகிலேயே மிகப்பெரிய பணக்கார குடும்பமாக கருதப்படுகிறது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் வால்மார்ட் நிறுவனத்தின் மதிப்பு 1,140 கோடி டாலர்(இந்திய மதிப்பில் சுமார் ₹90,000 கோடி) குறைந்துள்ளது. குறிப்பாக, வால்மார்ட் நிறுவனத்தின் ஒரு பங்கிற்கான வருமானம் இந்த ஆண்டு சுமார் 13% குறையும் என அந்நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இதற்கிடையே நேற்று பங்கு வர்த்தகத்தின் போது 7.64% பங்குகள் சரிந்தன.
பணவீக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் விலைவாசி உயர்ந்து வருகிறது. இதனால், மக்களும் செலவுகளை குறைத்து வருகின்றனர். சரக்குகளும் நிறைய தேங்கி கிடப்பதாக வால்மார்ட் தெரிவித்துள்ளது.
-பா.ஈ.பரசுராமன்.