எஸ்பிஐ வங்கி அனைத்து கடன்களுக்கான வட்டிவிகிதத்தை 0.20% உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
பணவீக்கத்தை கட்டுபடுத்தும் விதமாக ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 0.50 சதவீதம் உயர்த்தியது. இதையடுத்து பல்வேறு வங்கிகளும் கடன்களுக்கான வட்டிவிகிதத்தை உயர்த்தி வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி எம்சிஎல்ஆர் அடிப்படையிலான கடன்களுக்கான வட்டி விகிதத்தை 20 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது.
இதன்படி, 3 மாதங்களுக்கான வட்டி விகிதம் 7.15% இருந்து 7.35% ஆக அதிகரித்துள்ளது. 6 மாதங்களுக்கான வட்டிவிகிதம் 7.45% இருந்து 7.65% ஆகவும், ஓராண்டுக்கான வட்டி விகிதம் 7.50% இருந்து 7.70% ஆகவும் அதிகரித்துள்ளது. இதேபோல், இரண்டு ஆண்டுகளுக்கான வட்டிவிகிதம் 7.7% இருந்து 7.9% ஆகவும், 3 ஆண்டுகளுக்கான வட்டிவிகிதம் 7.8% இருந்து 8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வட்டிவிகித உயர்வால் வீட்டுக்கடன், வாகனக்கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களுக்கான இஎம்ஐ அதிகரிக்கும். இந்த புதிய வட்டிவிகிதங்கள் இன்றுமுதல் (ஆகஸ்டு 15) அமலுக்கு வந்துள்ளன.




