தங்கப்பத்திர விற்பனை ஆகஸ்டு 22ம் தேதி அதாவது நாளை தொடங்குகிறது.
நடப்பு நிதியாண்டுக்கான இரண்டாம் தொகுப்பு தங்கப்பத்திர விற்பனைக்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளை முதல் (ஆகஸ்டு 22) ஆகஸ்டு 26ம் தேதி வரை தங்கப்பத்திர விற்பனை நடைபெறும். இந்த தங்கப் பத்திரத்தின் விலை கிராமுக்கு ₹5,197 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் தங்கப்பத்திரம் வாங்குபவர்களுக்கு கிராமுக்கு ₹50 தள்ளுபடி கிடைக்கும். அதாவது, ஆன்லைனில் ₹5,147க்கு தங்கப்பத்திரம் வாங்கலாம்.
தங்கப்பத்திரம் வாங்குவதன் நன்மைகள்:
*தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது பாதுகாப்பான முதலீடு ஆகும்.
*இதற்கு ஜிஎஸ்டி கிடையாது.
*செய்கூலி, சேதாரம் போன்ற கூடுதல் செலவுகள் இல்லை.
*வங்கிகள், தபால் அலுவலகங்கள் மற்றும் பங்குச்சந்தை வாயிலாக தங்கப் பத்திரங்களை வாங்கலாம்.