விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழா நாளை (31.08.2022) கொண்டாடப்படுகிறது. இதற்காக பல்வேறு வடிவமைப்பிலான சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
அதன்படி, மல்லிகை பூ கிலோ ₹800க்கும், முல்லை கிலோ ₹500க்கும், சம்பங்கி கிலோ ₹150க்கும் விற்பனை செய்யப்படுகிறது.ரோஜா பூ கிலோ ₹160க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் குறைவாகவே பூக்களை வாங்கிச் செல்கின்றனர். இந்த விலை உயர்வு இன்னும் அதிகரிக்கக்கூடும் என்றும் சில நாட்களுக்கு இதே விலையிலேயே நீடிக்கும் என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.