பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு தினமும் அதிகரித்து வருவது வாகன ஓட்டிகளுக்கி்டையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இன்று சென்னையை பொறுத்தவரை இன்று பெட்ரோல் விலை ரூ.83.63 ஆக விற்பனையாகிறது.

நாடு முழுவதும் மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாகவே மாறிவிட்டது எரிபொருள்களின் பயன்பாடுகள். மேலும் ஒவ்வொரு நாளும் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. முன்பெல்லாம் ஆண்டுக்கு இரு முறை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படும். ஆனால் தற்போது தினமும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு ஏற்பட்டுகிறது.
அதிலும் கொரோவினால் போடப்பட்ட ஊரடங்கினால் மக்கள் அவதிப்பட்டுவரும் நிலையில் தொடர்ந்து 20 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து தினமும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துவருகிறது. அதன்படி சென்னையில் இன்று டீசல் லிட்டருக்கு 13 காசுகள் உயர்ந்து 78.50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பெட்ரோல் விலை 20வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படாமல், 83.63 ரூபாய்க்கு விற்பனையாகிறது.