சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.
பெட்ரோல் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.83.63 ஆகவே நீடிக்கிறது. டீசல் விலையும் நேற்றைய அளவிலேயே ரூ.78.86 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
மற்ற நகரங்களில் பெட்ரோல் – டீசல் விலை!
டெல்லியில் பெட்ரோல் விலை – ரூ.80.43
டெல்லியில் டீசல் விலை – ரூ.81.94
கொல்கத்தாவில் பெட்ரோல் விலை – ரூ.82.10
கொல்கத்தாவில் டீசல் விலை – ரூ.77.04
மும்பையில் பெட்ரோல் விலை – ரூ.87.19
மும்பையில் டீசல் விலை – ரூ.80.11