உலக அளவில் ஆப்பிள் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக பிராண்ட் எனப்படும் சிறந்த தரத்தின் அடையாளமாக, ரிலையன்ஸ் குழுமம் தேந்தெடுக்கப்பட்டு உள்ளது.
எண்ணெய் முதல் டெலிகாம் வரை அனைத்து துறையிலும் கால் பதித்து தொடர் வெற்றிகளை மட்டுமே பார்த்து வருகிறது ரிலையன்ஸ் குழுமம். கடந்த சில மாதங்களாக ஜியோ நிறுவன பங்குளை விற்றதன் மூலம், சுமார் 1.50 லட்சம் கோடிக்கும் அதிகமாக நிதி திரட்டி, கடன் இல்லாத குழுமமாக உருவெடுத்துள்ளது ரிலையன்ஸ்.
இந்நிலையில், future brand எனும் அமைப்பு உலக அளவில் பெரு நிறுவனங்களின் தரம் மற்றும் சேவை ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதைதொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நடப்பாண்டில் ஆப்பிள் நிறுவனத்தை தொடர்ந்து அதிகபட்சமான வாடிக்கையாளர்களை பெற்ற இரண்டாவது நிறுவனம் ரிலையன்ஸ் எனவும், ஆப்பிள் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக பிராண்ட் எனப்படும் சிறந்த தரத்தின் அடையாளமாக ரிலையன்ஸ் குழுமம் திகழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மிகவும் மரியாதைக்குரிய அந்நிறுவனம் நெறிமுறைகளை கடைபிடித்து செயல்படுவதாகவும், ஒவ்வொருவரின் தேவையையும் உணர்ந்து பொருட்களை வழங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வளர்ச்சி, புதுமையான தயாரிப்புகள் மற்றும் சிறந்த வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றுடன், மக்கள் அந்த குழுமத்துடன் வலுவான உணர்ச்சி ரீதியான தொடர்பைக் கொண்டு இருப்பதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.