தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.

தங்கம் விலை தொடர்ந்து எட்டாவது நாளாக இன்றும் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை அதிகரித்து வருவதால் மக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர்.
நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 4,586 ஆக இருக்க இன்று ஒரு ரூபாய் உயர்ந்து ரூ. 4,587 ஆக இருக்கிறது. அதேபோல, 8 கிராம் ஆபரண தங்கமும் விலை எட்டு ரூபாய் உயர்ந்து ரூ. 38,856க்கு விற்பனை ஆகிறது. அதே சமயத்தில் வெள்ளியின் விலையில் நேற்று எந்த மாற்றமும் இல்லாமல் இருந்து இன்று சற்று விலை குறைந்துள்ளது.
அந்த வகையில், நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ. 74.50 இருந்தது இன்று ரூ. 74.30 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 74,300க்கு விற்பனை ஆகிறது.




